BREAKING
மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

யாழில் உலுக்கிய கொடூரக் கொலை வழக்கு : ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

யாழில் உலுக்கிய கொடூரக் கொலை வழக்கு : ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு நபர்களுக்கு மரண தண்டனை விதித்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் நேற்று (20) தீர்ப்பளித்துள்ளது.

2010 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி, மந்தைவெளி பகுதியில் வசித்து வந்த 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் அப்போது யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு, கடந்த 13 ஆண்டுகளாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

வழக்கில்,

எதிரிகள் சார்பில் மூத்த சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா முன்னிலையாகியிருந்தார்.

வழக்குத் தொடுநர் தரப்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி கா. நசிகேதன் வழக்கை நெறிப்படுத்தினார்.

சம்பவம் தொடர்பான சாட்சியங்கள், வாக்குமூல்கள் மற்றும் ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி. எஸ். சூசைதாஸ்,

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்மானித்தார்.

இதனைத் தொடர்ந்து, மந்தைவெளி பிரதேசத்தைச் சேர்ந்த இரு எதிரிகளையும் குற்றவாளிகளாகக் கண்டறிந்த நீதிபதி, அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

13 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, நீண்டகாலம் நீதிக்காக காத்திருந்த குடும்பத்தினருக்கு ஓரளவு ஆறுதலை அளித்துள்ளதாகவும், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் சட்ட வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

யாழில் உலுக்கிய கொலை வழக்கு : 13 ஆண்டுகளுக்குப் பின் இருவருக்கு மரண தண்டனை

2010 ஆம் ஆண்டு கொடிகாமம் – மந்தைவெளியில் இடம்பெற்ற கொடூரக் கொலை வழக்கில், 13 ஆண்டுகளுக்குப் பின் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"