BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: எரிக்காமல் புதைக்கக் குடும்பத்தினர் முடிவு - அரசியல் சூழ்ச்சியா?

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: எரிக்காமல் புதைக்கக் குடும்பத்தினர் முடிவு - அரசியல் சூழ்ச்சியா?

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணத்தில் பல்வேறு அரசியல் தரப்பினரால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில் அவரது குடும்பத்தினர் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளனர். அவரது மரணம் திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால், எதிர்கால சட்ட ரீதியான விசாரணைகளுக்கு ஏதுவாக உடலைத் தகனம் செய்வதற்குப் பதிலாக அடக்கம் செய்ய (Burial) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 உடலை எரித்துவிட்டால் தடயங்கள் அழிந்துவிடும் என்பதால், தேவைப்படின் எதிர்காலத்தில் உடலைத் தோண்டியெடுத்துப் பரிசோதனை (Exhumation) செய்வதற்கு வசதியாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 நந்தன குணதிலக்கவின் சகோதரி மங்கள கருணாரத்ன கூறுகையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி கடந்த அக்டோபர் மாதம் சர்வதேசக் குற்றக் கண்காணிப்பு அமைப்பு ஒன்றில் நந்தன குணதிலக்க முறைப்பாடு செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, "விஷம் கொடுத்தோ அல்லது வீதி விபத்து போன்றோ தான் கொல்லப்படலாம் என நந்தன என்னிடம் பலமுறை அஞ்சினார்" எனச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"