BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாண அரசாங்க அதிபருடன் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிராந்திய ஆணையாளர் கலந்துரையாடல்

யாழ்ப்பாண அரசாங்க அதிபருடன் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிராந்திய ஆணையாளர் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய ஆணையாளர் குணதுங்க, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை நேற்று (06.07.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது, வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக அண்மைய நாட்களாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்பாக அரசாங்க அதிபர் முன்கூட்டியே உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியமைக்கு பிராந்திய ஆணையாளர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் போது, 2023 ஆம் ஆண்டு 2334/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2024 ஜனவரி 1 முதல் கட்டாயமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றிருக்க வேண்டும் என்பதும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், 2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 2026 ஏப்ரல் 1 முதல் வங்கிக் கணக்கு திறத்தல், கட்டடத் திட்ட அனுமதி பெறுதல், மோட்டார் வாகன பதிவு மற்றும் உரிமம் புதுப்பித்தல், நிலப் பதிவு அல்லது உரிமை மாற்றம், நிறுவனப் பங்குகள் மாற்றம் மற்றும் கிரெடிட் கார்டு பெறுதல் உள்ளிட்ட பல சேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.

TIN இலக்கத்தை ஏற்கனவே பெற்றவர்கள் QR குறியீடு அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணைய சேவையின் மூலம் OTP உறுதிப்படுத்தலுடன் தங்களது இலக்கத்தை பார்வையிட முடியும் என்றும், இதுவரை பதிவு செய்யாதவர்கள் இணையவழி சேவை அல்லது திணைக்கள அலுவலகங்களில் விண்ணப்பித்து TIN இலக்கத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. புதிய பதிவுகளுக்கான TIN சான்றிதழ்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்றும், மேலதிக தகவல்களுக்கு 0212217333 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"