BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: இலங்கையில் உடனடி எரிபொருள் விலை குறைப்பு இல்லை

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: இலங்கையில் உடனடி எரிபொருள் விலை குறைப்பு இல்லை

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் அண்மையில் கணிசமாக குறைந்துள்ள போதிலும், இலங்கையில் எரிபொருள் விலையில் உடனடி மாற்றம் அல்லது குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை கனிமவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமாரக வெளியிட்டுள்ள தகவலின்படி, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் குறைந்திருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசலின் சர்வதேச விலைகள் இன்னும் முழுமையாக பழைய நிலைக்கு திரும்பவில்லை. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்ற நிலைமையால் ஏற்பட்ட விலை உயர்வின் தாக்கம் தொடர்ந்தும் சந்தையில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் தலைவர்களுக்கிடையில் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் எட்டப்பட்ட ஆரம்பகட்ட அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து, உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சமீபத்திய சந்தை நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.18 அமெரிக்க டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.29 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

உலக சந்தை விலை சரிவைத் தொடர்ந்து பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட சில நாடுகள் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருள் விலைகளை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், தற்போதைய சர்வதேச விலை நிலவரம் இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்கும் அளவுக்கு போதுமானதாக இல்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எரிபொருள் விலை தொடர்பான அடுத்தடுத்த முடிவுகள் உலக சந்தை நிலவரம், இறக்குமதி செலவுகள் மற்றும் உள்நாட்டு விலைச் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"