BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை: கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை: கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

அமைச்சின் அறிக்கையின்படி, எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகுவதற்குத் தேவையான கால அளவு போதுமான அளவில் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் வழிகாட்டலின் அடிப்படையில் உயர்தரப் பாடத்திட்டங்களை முழுமையாக கற்பிக்க 300 பாடசாலை நாட்கள் தேவைப்படுகின்றன. ஆனால் 2026 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஆகஸ்ட் 07 வரை மொத்தம் 343 பாடசாலை நாட்கள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கடந்த பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நாள் முதல் இம்முறை பரீட்சை நடைபெறும் நாள் வரை 4 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகுவதற்கான போதுமான காலம் கிடைத்துள்ளதாக அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அதற்கமைய, தற்போதைய பரீட்சை அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும், திட்டமிட்டபடி 2026 ஆகஸ்ட் 10 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"