BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தெல்தெனியாவில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியீடு

தெல்தெனியாவில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியீடு

கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பில் பொலிஸார் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணியாற்றிய 33 வயதுடைய ஷம்யா தர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த பெண்ணும் அவரது காதலனும் கனடாவுக்கு செல்வதற்கான திட்டங்களை மேற்கொண்டிருந்ததாகவும், அதற்காக பெருமளவு பணம் கடனாக பெற்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

எனினும், திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் கடன் வழங்கியவர்கள் பணத்தை மீளக் கோரியதால், அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த ஹோட்டலின் கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மயக்க நிலையில் காணப்பட்ட பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள காதலன் கண்டி மாவட்டத்தின் கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் எனவும், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோட்டலில் தங்கியிருந்த காலப்பகுதியில் பல நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என உயிரிழந்த பெண் தனது சகோதரரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்திருந்ததாகவும், அவர் மனநல ஆலோசனைகளையும் பெற்றிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேகநபருக்கும் இடையே சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"