BREAKING
ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தீர்வு கோரிக்கை - ஈழத்து கடற்றொழிலாளர்கள் உரிமை வலியுறுத்தல் இலங்கையில் புதிய வரித் திருத்தங்கள் அமல் - பல பரிவர்த்தனைகளுக்கு TIN கட்டாயம் இலங்கையின் பல மாவட்டங்கள் டெங்கு அபாயப் பகுதிகளாக அறிவிப்பு - சுகாதார எச்சரிக்கை யாழ்ப்பாணத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து தொல்லியல் நிபுணர் குழு ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தீர்வு கோரிக்கை - ஈழத்து கடற்றொழிலாளர்கள் உரிமை வலியுறுத்தல் இலங்கையில் புதிய வரித் திருத்தங்கள் அமல் - பல பரிவர்த்தனைகளுக்கு TIN கட்டாயம் இலங்கையின் பல மாவட்டங்கள் டெங்கு அபாயப் பகுதிகளாக அறிவிப்பு - சுகாதார எச்சரிக்கை யாழ்ப்பாணத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்து தொல்லியல் நிபுணர் குழு

போலி கனடா கடவுச்சீட்டுடன் லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் தாய்லாந்தில் கைது

போலி கனடா கடவுச்சீட்டுடன் லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் தாய்லாந்தில் கைது

போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு பயணம் மேற்கொள்ள முயன்றதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். லண்டன் நோக்கி புறப்படவிருந்த விமானத்தில் ஏறுவதற்காக குறித்த நபர் விமான நிலையத்திற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பயணச் சோதனைகளின் போது அவர் சமர்ப்பித்திருந்த கனடா நாட்டின் கடவுச்சீட்டு மற்றும் பயண ஆவணங்களில் சந்தேகத்திற்கிடமான முரண்பாடுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளில் அந்த ஆவணம் போலியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து குறித்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் குடிவரவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளின் போது அவர் இலங்கைப் பிரஜை என்பதும், சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு நாடுகள் ஊடான பயணத் திட்டத்தை வகுத்திருந்ததும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தாய்லாந்து குடிவரவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், போலி பயண ஆவணங்களை பயன்படுத்தி சர்வதேச எல்லைகளை கடக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"