BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் மாதங்களில் ரூ. , கோடி தங்கக் கடன் அதிகரிப்பு: பேராதனைப் பேராசிரியர் வசந்த அத்துகோரள அதிரடி புள்ளிவிபரம்!

இலங்கையில் மாதங்களில் ரூ. , கோடி தங்கக் கடன் அதிகரிப்பு: பேராதனைப் பேராசிரியர் வசந்த அத்துகோரள அதிரடி புள்ளிவிபரம்!

பேராசிரியர் வசந்த அத்துகோரள வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தங்கக் கடன்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி பின்வருமாறு அமைந்துள்ளது:

2024 ஆம் ஆண்டின் இறுதியில்: வணிக வங்கிகளில் பெறப்பட்ட மொத்தத் தங்கக் கடன் தொகை 66,024 கோடி ரூபாய் ஆகக் காணப்பட்டது.

2026 மார்ச் மாதமளவில்: இந்தத் தொகை மிகப்பாரிய அளவில் உயர்வடைந்து 101,169 கோடி ரூபாய் (ஒரு இலட்சத்து ஓராயிரத்து நூற்று அறுபத்தொன்பது கோடி) வரை அதிகரித்துள்ளது.

15 மாத கால அதிகரிப்பு: அதற்கமைய, கடந்த 15 மாத காலப்பகுதிக்குள் மட்டும் பொதுமக்கள் மேலதிகமாக 35,145 கோடி ரூபாய் பெறுமதியான தங்கப் பொருட்களை வங்கிகளில் அடகு வைத்துக் கடன்களைப் பெற்றுள்ளனர்.

இலங்கையிலுள்ள மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையான 6 மில்லியனை (60 இலட்சம்) அடிப்படையாகக் கொண்டு, ஒரு சராசரிக் குடும்பத்தின் தங்கக் கடன் சுமையை பேராசிரியர் கணிப்பிட்டுக் காட்டியுள்ளார்:

இதன்படி, நாட்டில் உள்ள ஒரு சராசரிக் குடும்பம் தமக்குச் சொந்தமான தங்க நகைகளை அடகு வைத்து வணிக வங்கிகளில் இருந்து தற்போது சராசரியாக 1,67,761 ரூபாய் பணத்தைக் கடனாகப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தனியார் துறை கடன்களின் வளர்ச்சி:

கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் வணிக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தக் கடன்கள் மற்றும் முன்பணங்களில் (Advances) குறிப்பிடத்தக்கதொரு வளர்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும், அதில் நுகர்வோர் தங்களது அவசரத் தேவைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் தங்க நகைகளை அடகு வைக்கும் வீதமே பெருமளவில் ஆதிக்கம் செலுத்துவதாகப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"