BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

பாக்ஸ் ஆபீஸில் 'கருப்பு' வேட்டை

பாக்ஸ் ஆபீஸில் 'கருப்பு' வேட்டை

'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' ஆகிய வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான 'கருப்பு' திரைப்படம் தியேட்டர்களில் வசூல் புயலைக் கிளப்பி வருகிறது. இத்திரைப்படத்தில் 'வேட்டை கருப்பனாக' நடிகர் சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா நடித்துள்ள இப்படத்தில் இந்திரன்ஸ், அனாகா, ஸ்வாசிகா, ஷிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளன.

11 நாட்கள் உலகளாவிய வசூல் நிலவரம்:
கடந்த மே 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான 'கருப்பு' திரைப்படம், ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ள இத்திரைப்படம், தற்போது 11 நாட்களில் உலகளவில் 266 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஃபேன்டஸி கோர்ட்ரூம் டிராமாவாக (Fantasy Courtroom Drama) ஆர்.ஜே. பாலாஜி இதனை இயக்கியுள்ளதால், திரையரங்குகளில் குடும்ப ரசிகர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே அதிரடி வேகம் தொடரும் பட்சத்தில், 'கருப்பு' திரைப்படம் மிக விரைவில் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் எனத் திரைத்துறை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"