BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ரெட் கார்ப்பெட்டில் நீல நிற உடையில் தேவதை போல் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்!

ரெட் கார்ப்பெட்டில் நீல நிற உடையில் தேவதை போல் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்!

பிரான்சில் தற்போது நடைபெற்று வரும் புகழ்பெற்ற 79-வது கேன்ஸ் (Cannes 2026) திரைப்பட விழாவுக்கு இந்தியாவில் இருந்து பல பிரபலங்கள் சென்றுள்ள நிலையில், உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பிரமிப்பூட்டும் முதல் ரெட் கார்ப்பெட் தோற்றத்தின் மூலம் ஒட்டுமொத்த சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இம்முறை அவர் கேன்ஸ் விழாவிற்கு வருவாரா மாட்டாரா என்ற ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தனது மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றடைந்த அவர் நேற்று ரெட் கார்ப்பெட்டில் தடம் பதித்தார்.


இந்திய ஆடை வடிவமைப்பாளர் அமித் அகர்வால் வடிவமைத்த, 'லுமினாரா' (Luminara) என்ற கருப்பொருளைக் கொண்ட அதிநவீன மற்றும் பளபளப்பான சஃபையர் நீல நிற (Sapphire-Blue) கவுன் உடையில் அவர் தேவதை போலக் காட்சியளித்தார். தோள்பட்டைகளில் சிறகுகள் போன்ற அமைப்பும், கைகளில் கேப் (Cape) போன்ற வடிவமைப்பும் கொண்ட இந்த உடையில், மென்மையான மேக்கப் மற்றும் வைர நெக்லஸ் அணிந்து அவர் கேன்ஸ் படிக்கட்டுகளில் இறங்கி வந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வெளியாகி உலகளவில் ட்ரெண்டாகி வருகின்றன.


ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவுக்குத் தவறாமல் செல்லும் ஐஸ்வர்யா ராய், அங்குள்ள சர்வதேச புகைப்படக் கலைஞர்களின் எப்போதுமே ஃபேவரிட் என்பது இம்முறையும் நிரூபணமாகியுள்ளது. ரெட் கார்ப்பெட்டில் தனது நீண்ட காலத் தோழியும் ஹாலிவுட் நடிகையுமான ஈவா லாங்கோரியாவைச் சந்தித்து அவர் அன்பைப் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"