BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி, சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி, சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி

Rajinikanth நடிப்பில் உருவாகி வரும் Jailer 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த இடத்தில் பரிதாபகரமான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

Nelson Dilipkumar இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் Chennai பனையூரில் உள்ள Adityaram Studios வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக வீட்டு செட் அமைப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், செட்டில் மின்விசிறி (ஃபேன்) பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. கடுமையாக காயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாலும், உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.

ரஜினிகாந்த் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட இந்த மரணம், தமிழ் திரைப்படத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"