BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வங்காள விரிகுடா காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்கிறது ; அடுத்த மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை

வங்காள விரிகுடா காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்கிறது ; அடுத்த மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை

மத்திய வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதால், இலங்கையில் நிலவிய மழையுடனான வானிலை மேலும் 48 மணி நேரத்திற்கு தொடரக்கூடும் என வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதன் தாக்கத்தால் நாட்டின் வடக்கு, மேற்கு, வடமேற்கு, மத்திய, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் மிகக் கனமழை ஏற்பட்டு வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை மற்றும் அதற்கு அடுத்த நாள்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவலாக கனமழை தொடரும் எனவும், சில பகுதிகளில் அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வானிலை நிலைமை காரணமாக பொதுமக்கள் அவதானமாக இருக்கவும், வெள்ளம் மற்றும் மின்னல் அபாயங்களை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"