BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

கோடியைத் தாண்டிய 'துரந்தர் ' வசூல் வேட்டை - மே -ல் ஓடிடி ரிலீஸ்!

கோடியைத் தாண்டிய 'துரந்தர் ' வசூல் வேட்டை - மே -ல் ஓடிடி ரிலீஸ்!

ஹிந்தி சினிமாவில் 'துரந்தர்' பிரான்சைஸ் (Franchise) தற்போது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான இதன் முதல் பாகம் 1300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவான 'துரந்தர் 2: The Revenge' மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டது. கடந்த மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று இதுவரை சுமார் 1830 கோடி ரூபாய் வரை வசூலித்து உலக அளவில் சாதனை படைத்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் மே 14-ம் தேதி இப்படம் நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்தியாவில் மட்டும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) தளத்தில் அதே நாளில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையிலும், ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். வசூலில் பல சாதனைகளைத் தகர்த்த இப்படம், ஓடிடி தளத்திலும் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"