BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு குடும்பத்தினர் உயிர் தப்பினர்

களுத்துறையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் தீ வைப்பு குடும்பத்தினர் உயிர் தப்பினர்

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதியாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று மாலை கும்பல் ஒன்று புகுந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளர், அவரது தாயார் மற்றும் மற்றொருவர் உள்ளிருந்த நிலையில், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

தீ விபத்தில் ஒருவருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயை களுத்துறை மாநகர சபை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தியுள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளில், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஹெரோயின் தொடர்பான கைது நடவடிக்கைக்கு உதவியதாகக் கூறப்படும் நபரின் வீட்டுக்கே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"