BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஜீப்சைக்கிள் மோதல் விபத்து முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது

மட்டக்களப்பில் ஜீப்சைக்கிள் மோதல் விபத்து முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரித்திச்சேனை சந்தியில் விசேட அதிரடிப்படையின் (STF) ஜீப் வண்டி சைக்கிளுடன் மோதியதில் 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்லடி முகாமிலிருந்து தாண்டியடி முகாமுக்கு பயணித்த ஜீப், எதிரே வந்த சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த அப்புஹாமி கிருஷ்ணபாலன் என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். விபத்துக்குப் பின்னர் STF ஜீப் வண்டியை ஓட்டிய சாரதி நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுணதீவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"