BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் ஆன்லைன் மோசடி: இலட்சக்கணக்கில் பணம் இழந்த பொதுமக்கள்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் ஆன்லைன் மோசடி: இலட்சக்கணக்கில் பணம் இழந்த பொதுமக்கள்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய பெயரை தவறாக பயன்படுத்தி, இணையதளங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் பொதுமக்களை குறிவைத்து செயல்பட்டுள்ள மோசடி கும்பல் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான டிக்கெட் சலுகைகள், விசேஷ offers மற்றும் fake booking platforms ஆகியவற்றின் மூலம் மக்களை ஏமாற்றி, வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொண்டு இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவு தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, பமுணுகம பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 55 இலட்சம் ரூபாயும், கடவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கணக்கிலிருந்து 3.5 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையும் இவ்வாறான மோசடி வழியாக இழக்கப்பட்டுள்ளன.

இந்த நிதி மோசடி சம்பவம் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திலும் எடுத்துக்கூறப்பட்டுள்ள நிலையில், இது ஒரு திட்டமிட்ட மற்றும் அமைப்புசார்ந்த குற்றச் செயலாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விசாரணை முன்னேற்றங்களை இடையறாது நீதிமன்றத்திற்கு அறியத்தருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான லிங்குகள் அல்லது அழைப்புகள் மூலம் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்களை பகிர வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இணைய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மிக அவசியமாகியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"