BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

கொழும்பில் சோகம்: பேருந்து மோதி வயது பாடசாலை மாணவி பரிதாப மரணம்!

கொழும்பில் சோகம்: பேருந்து மோதி வயது பாடசாலை மாணவி பரிதாப மரணம்!

கொழும்பு, மட்டக்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தல தொட்டுபால வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவராவார். குறித்த சிறுமி தான் பயணித்த பேருந்திலிருந்து இறங்கி, அதன் முன்னால் வீதியைக் கடக்க முயன்ற போது, அதே பேருந்து அவர் மீது மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக அங்கிருந்தவர்களின் உதவியுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அஜாக்கிரதையாகப் பேருந்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மட்டக்குளிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாடசாலை விடுமுறை ஆரம்பமான முதல் நாளிலேயே இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"