BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

பாடசாலைகளுக்கு இன்று முதல் புத்தாண்டு விடுமுறை: மீண்டும் ஏப்ரல் -ல் திறப்பு!

பாடசாலைகளுக்கு இன்று முதல் புத்தாண்டு விடுமுறை: மீண்டும் ஏப்ரல் -ல் திறப்பு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டக் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10.04.2026) நிறைவடைவதாகக் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாளை (ஏப்ரல் 11) முதல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணையானது தொடர்ந்து ஜூலை 24, 2026 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறை முடிந்து பாடசாலைகள் ஆரம்பமாகும் போது மாணவர்கள் புதிய தவணைக்கான பாடத்திட்டங்களைத் தொடங்குவதற்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"