இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் 'A' (3A) அதி உயர் சித்திகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சார்த்திகளும், 823 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர். இம்முறை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 176,527 மாணவர்கள் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், எவ்வித பாடங்களிலும் சித்தி அடையாத (Fail) மாணவர்களின் எண்ணிக்கை 30,898 ஆகப் பதிவாகியுள்ளது. இவர்களில் 19,301 பாடசாலை மாணவர்களும், 11,597 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்குவர். மேலும், பல்வேறு முறைகேடுகள் மற்றும் காரணங்களுக்காக 11 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் திணைக்களத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இயற்பியல் அறிவியல் துறையில் கிளிநொச்சியைச் சேர்ந்த மாணவன் முதலிடம் பிடித்துள்ள நிலையில், ஒட்டுமொத்தப் பெறுபேறுகளும் தற்பொழுது இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக