BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வழங்கல்

அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வழங்கல்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படுகின்றன என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக 622,462 சிரேஷ்ட பிரஜைகளுக்கு மார்ச் மாத கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இந்த நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இன்று வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தகுதியுடைய முதியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தங்களது வங்கிக் கணக்குகள் வழியாக அஸ்வெசும நன்மைகளை எளிதாகப் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"