BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பொலிஸார் அட்டகாசம்: சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் - இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பொலிஸார் அட்டகாசம்: சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் - இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் நேற்றைய தினம் காங்கேசன்துறைப் பிரிவு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் குழுவொன்று தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு சமைத்து உண்டு, மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, பருத்தித்துறைப் பகுதியிலிருந்து அங்கு சுற்றுலா வந்திருந்த மற்றொரு குழுவினருடன் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த பொலிஸார் அந்தச் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவர் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரச உத்தியோகபூர்வ வாகனத்தைப் பயன்படுத்திச் சுற்றுலா சென்றமை, பொது இடத்தில் மேலாடைகள் இன்றி மதுபோதையில் அட்டகாசத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராகக் கடுமையான திணைக்கள ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"