BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எரிபொருள் விலை உயர்வு: பேருந்து கட்டண உயர்வு முன்மொழிவு இன்று அமைச்சரவைக்கு

எரிபொருள் விலை உயர்வு: பேருந்து கட்டண உயர்வு முன்மொழிவு இன்று அமைச்சரவைக்கு

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளை டீசல் விலை உயர்வினால், பேருந்து கட்டண திருத்த சூத்திரத்தின் அடிப்படையில் தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, புதிய கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி கோரி பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பேருந்து கட்டண திருத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்திருக்க வேண்டும் என பல பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாட முயன்றபோதும் தமக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை என சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், கட்டண உயர்வு நடைமுறைக்கு வராத காரணத்தினால், இன்று சில பேருந்து சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் வரை சேவைகளை தொடர்ந்து நடத்துவது கடினம் என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன், 10 சதவீதத்திற்கும் அதிகமான கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"