BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

மாத்தறையில் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு

மாத்தறையில் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு

மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர பகுதியில், பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குழாய் கிணறு தோண்டும் பணிகளின் போது மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் ஆதாரத்தை தேசிய நீர்வளம் மற்றும் நீர் வழங்கல் சபை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

தென் மாகாணத்திற்கு பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே தெரிவித்ததாவது, நிமிடத்திற்கு 10,000 லிட்டர் அளவில் தொடர்ந்து நீர் வெளியேறும் நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது இலங்கையில் இதுவே முதல் முறை என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மன்னார் மாவட்டத்தின் மடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் ஆதாரம் நிமிடத்திற்கு சுமார் 7,000 லிட்டர் அளவிலேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் அடுக்கு முறிவுகளை அடையாளம் கண்டு நிலத்தடி நீர் இருக்கும் இடம் கண்டறியப்பட்ட பின்னர் இந்த குழாய் கிணறு தோண்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், எதிர்காலத்தில் பிடபெத்தர, மொரவக்க மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வளம் மற்றும் நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"