BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

குருநகர்: புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு நீரில் மூழ்கி விபத்து ஒருவர் உயிரிழந்தார்

குருநகர்: புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு நீரில் மூழ்கி விபத்து ஒருவர் உயிரிழந்தார்

குருநகரில் உள்ள இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் சற்று முன்பே இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஆலயத்திற்குச் சென்ற பயணிகளை ஏற்றிருந்த படகில் முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. மீட்பு குழுக்கள், மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"