BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஓடும் ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்ப நிபுணர் உயிரிழப்பு

ஓடும் ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்ப நிபுணர் உயிரிழப்பு

வாதுவ ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வாதுவ பாலிகா வீதியில் வசிக்கும் 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் இன்று காலை வாதுவ ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்ற பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது அவர் தவறி விழுந்து ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"