BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

அரநாயக்கையில் செவிலியர் கொலை: சந்தேக நபர் விளக்கமறியலில்

அரநாயக்கையில் செவிலியர் கொலை: சந்தேக நபர் விளக்கமறியலில்

கேகாலை மாவட்டம் அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற செவிலியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் மார்புப் பகுதியில் குத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பிள்ளையின் தாயான இவர், கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட செவிலியருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் 33 வயதுடைய மனோஜ் பெத்தும் அகலங்க என்ற நபருக்கும் இடையே நீண்டகால தொடர்பு இருந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி பணி முடித்து வீடு திரும்பிய செவிலியருக்கும் குறித்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி, அது கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தன்று மாலை 7.30 மணியளவில் வீதியில் சென்றுகொண்டிருந்த அவரைத் துரத்திச் சென்ற சந்தேக நபர் கத்தியால் மார்பில் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இரத்த வெள்ளத்தில் வீதியில் விழுந்து கிடந்த அவரை அப்பகுதி மக்கள் உடனடியாக அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் அரநாயக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அவர் ஏற்கனவே திருமணமாகி சட்ட ரீதியாகப் பிரிந்தவர் என்பதும், ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலையை செய்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாவனெல்லை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"