BREAKING
மட்டக்களப்பை ஆட்டம் காண வைக்கும் ஒற்றை குரங்கு ; திணறும் அதிகாரிகள் தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு அதிரடி இரத்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல் ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு மட்டக்களப்பை ஆட்டம் காண வைக்கும் ஒற்றை குரங்கு ; திணறும் அதிகாரிகள் தமிழர் பகுதியில் சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தேரருக்கு கிடைத்த தண்டனை நாமல் ராஜபக்சவின் பிணை உத்தரவு அதிரடி இரத்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கர்ப்பம் ; கரு கலைந்த சோகத்தில் இளம்பெண் செய்த செயல் ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

பொலிஸாரைக் கண்டதும் இப்படியா! யாழில் வீட்டிற்குள் இளைஞர் அரங்கேற்றிய செயலால் பரபரப்பு

பொலிஸாரைக் கண்டதும் இப்படியா! யாழில் வீட்டிற்குள் இளைஞர் அரங்கேற்றிய செயலால் பரபரப்பு

யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸாரைக் கண்டதும், குறித்த நபர் தனது கழுத்தைத் தானே அறுத்துத் தப்பிக்க முயன்றுள்ளார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். நல்லூரை அண்டிய பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞர் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அவரை அழைத்துவர நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர்.

 இதன்போது பொலிஸாரைக் கண்ட அந்த இளைஞர், வீட்டின் ஜன்னலை உடைத்து அந்தக் கண்ணாடித் துண்டின் மூலம் தனது கழுத்தை அறுத்துக்கொள்ள முயன்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரால் உடனடியாக மீட்கப்பட்ட மேற்படி இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கழுத்தை அறுக்க முயன்றபோதும் அவருக்குப் பாரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படாத காரணத்தால், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையின் 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"