BREAKING
கடைசி காலத்தில் புண்ணியம் தேடிக்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா! வவுனியாவில் சோதனைக்கு சென்ற ஊழியர் மீது பெண் தாக்குதல்; நடந்தது என்ன! தீபாவளி ; மது போதையில் மனோகணேசன் கைதாகி விடுதலை 2027 வரவு செலவுத் திட்ட யோசனை; ஜனாதிபதியின் பார்வைக்கு! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தீர்ப்பு ஒத்திவைப்பு கடைசி காலத்தில் புண்ணியம் தேடிக்கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா! வவுனியாவில் சோதனைக்கு சென்ற ஊழியர் மீது பெண் தாக்குதல்; நடந்தது என்ன! தீபாவளி ; மது போதையில் மனோகணேசன் கைதாகி விடுதலை 2027 வரவு செலவுத் திட்ட யோசனை; ஜனாதிபதியின் பார்வைக்கு! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தீர்ப்பு ஒத்திவைப்பு

விரும்பிய காய்கறி சமைக்காத மனைவி ; ராணுவ வீரருக்கு வீ்ட்டுக்குள் அரங்கேறிய கொடூரம்

விரும்பிய காய்கறி சமைக்காத மனைவி ; ராணுவ வீரருக்கு வீ்ட்டுக்குள் அரங்கேறிய கொடூரம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், இரவு உணவிற்கு தான் கேட்ட காய்கறியைச் சமைக்காததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியாலேயே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரோடா பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.

இவரது மனைவிக்கு இடையே ஏற்கனவே குடும்ப மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது இரவு உணவிற்காக சமைத்திருந்த காய்கறி பிடிக்காததால், தான் கேட்ட பீர்க்கங்காயை ஏன் சமைக்கவில்லை எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே தொடங்கிய இந்த சிறிய வாக்குவாதம், சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி முற்றியது. இதனால் கடும் ஆத்திரமடைந்த மனைவி சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கணவரின் நெஞ்சின் இடது பகுதியில் பலமாகக் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாதாரண சமையல் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"