பிரான்ஸில் உள்ள பல இரத்த வங்கிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் மூலம், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த இரத்தப் பொருட்கள் மற்றும் மாதிரிகளின் வெப்பநிலையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், பிரான்ஸ் அதிகாரிகள் தலையிட்டு, பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னரே குறித்த தாக்குதலைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டிகள் மற்றும் உறைநிலைக் கட்டமைப்புகளைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி, அவற்றின் வெப்பநிலையை அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள் பதிவாகியுள்ள பின்னணியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதல்களால் பெருமளவிலான உணவுப் பொருட்கள் பழுதடைந்ததுடன், மில்லியன் கணக்கான டொலர்கள் மற்றும் யூரோக்கள் பெறுமதியான இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக