BREAKING
ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல்

ஆழ்கடலில் பிடிப்பட்ட கிலோ போதைப்பொருள் ; மேலதிக தகவல்

ஆழ்கடலில் பிடிப்பட்ட கிலோ போதைப்பொருள் ; மேலதிக தகவல்

  இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மீன்பிடிப் படகில் காணப்பட்ட போதைப்பொருளின் அளவு 189 கிலோ கிராமிற்கும் அதிகம் என கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த மீன்பிடிப் படகில் இருந்து 132 கிலோ 026 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 57 கிலோ 220 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதன் சந்தைப் பெறுமதி 4.2 பில்லியன் ரூபாய் என கடற்படை குறிப்பிட்டுள்ளது.

தெற்கு ஆழ்கடல் பகுதியில் போதைப்பொருள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதிகளை கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடிப் படகொன்று, கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையின் போது அண்மையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது.

அந்த மீன்பிடிப் படகு இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறித்த பொதிகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

மீன்பிடிப் படகில் இருந்த ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இந்த போதைப்பொருள் தொகுதியானது 'தெஹிபாலே மல்லி' என்பவரால் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

போதைப்பொருள் தொகுதியை சோதனையிடுவதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, கடற்படை தளபதி மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.   

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"