BREAKING
ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் ரூ.190 பில்லியன் பண மோசடி; இருவருக்கு விளக்கமறியல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல்

தயாசிறியின் பொதுச் செயலாளர் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

தயாசிறியின் பொதுச் செயலாளர் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தம்மை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது.

தம்மை கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ளுமாறும், துமிந்த திசாநாயக்க செயலாளர் பதவியை வகிப்பதையும், நிமால் சிறிபால டி சில்வா கட்சியின் தலைவராகப் பணியாற்றுவதையும் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி தயாசிறி ஜயசேகர கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். எனினும், குறித்த கோரிக்கைகளை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் முன்னதாக நிராகரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, தாம் கோரிய நிவாரணங்களை வழங்குமாறு கோரி தயாசிறி ஜயசேகர மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நிமால் சிறிபால டி சில்வா கட்சித் தலைவராகப் பணியாற்றுவதையும், துமிந்த திசாநாயக்க செயலாளர் பதவியின் பணிகளை மேற்கொள்வதையும் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

அத்துடன், குறித்த வழக்கின் முதன்மை விசாரணை 2027 ஜனவரி 08ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"