BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை

தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை

காலி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விசாரணை, காலி திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு வெளியே கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியில், ஒருவர் தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் கூறி, பொலிஸ் நிலையத்திற்குள் அமைதியற்ற முறையில் நடந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, குறித்த முதியவர் நேற்று (24) இரவு மதுபோதையில் வீதியில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், இதன் காரணமாக அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யும் போது குறித்த நபர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அவ்வாறு முயன்றபோது கீழே விழுந்ததால் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்கான அடையாளங்கள் காணொளியில் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர், குறித்த நபர் நேற்று (25) பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் பலப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளியின் உண்மைத் தன்மை மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"