BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாட்டின் பொருளாதாரம் குறித்து ரணில் எச்சரிக்கை; பில்லியன் டொலர் தேவைப்படலாம் என தகவல்

நாட்டின் பொருளாதாரம் குறித்து ரணில் எச்சரிக்கை; பில்லியன் டொலர் தேவைப்படலாம் என தகவல்

இலங்கையின் எதிர்கால பொருளாதார நிலைமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) தற்போதைய ஒப்பந்தம் நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், 2028ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் வெளிநாட்டு கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படும் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, அதனை எதிர்கொள்ள நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு வலுவாக இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர் அளவில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மத்திய வங்கி இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 8 பில்லியன் டொலராக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கையிருப்பு 8 பில்லியன் டொலராக இருந்தால், மேலும் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட வேண்டிய நிலை ஏற்படும் என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்காலத்தில் தேவையாகும் அந்த 6 பில்லியன் டொலர்களை எவ்வாறு திரட்டுவது என்பது தொடர்பில் முன்கூட்டியே திட்டமிட்ட வேலைத்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய "யுத தெக்கட உர தீ" என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"