BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாட்கள் தடுப்பு காவலில் ஷிரான் பஸிக்; போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தீவிர விசாரணை

நாட்கள் தடுப்பு காவலில் ஷிரான் பஸிக்; போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தீவிர விசாரணை

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 48 வயதுடைய ஷிரான் பஸிக், 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளார்.

டுபாயில் கைது செய்யப்பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக CCID அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

டுபாயில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தொடர்பாகவும் அவர் விசாரணையாளர்களிடம் தகவல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரானுடனான மோதல் தீவிரமடைந்த காலத்தில் டுபாய் காவல்துறையினர் தம்மை வழிமறித்து விசாரணை செய்ததாகவும், தனது அலைபேசியில் ஈரானிய தாக்குதல்கள் தொடர்பான படங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஷிரான் பஸிக்கிற்கு எதிராக முன்வைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் CCID அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"