BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நெதன்யாகு மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும்: நியூயோர்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தல்

நெதன்யாகு மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும்: நியூயோர்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள காணொளி அறிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நெதன்யாகுவுக்கு எதிராக பிறப்பித்துள்ள பிடியாணையை சுட்டிக்காட்டிய அவர், அவரை போர்க் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் நபராக குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நெதன்யாகு நியூயோர்க் நகருக்கு வருகை தந்தால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற அண்மைய ஊகங்கள் குறித்து விளக்கமளித்த ஜோஹ்ரன் மம்தானி, அமெரிக்க சட்டங்களின் அடிப்படையில் நியூயோர்க் நகர நிர்வாகத்திற்கு தனிப்பட்ட முறையில் அவரைக் கைது செய்யும் சட்ட அதிகாரம் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

எனினும், சர்வதேச சட்டம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நடைமுறைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் உரிய சட்ட அமைப்புகளின் மூலம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"