BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

வவுனியாவில் சோகம்: கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம்!

வவுனியாவில் சோகம்: கனடா நாட்டுப் பிரஜை திடீர் மரணம்!

வவுனியாவிற்கு வருகை தந்து உக்கிளாங்குளம் பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த கனடா, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று (30.04.2026) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வவுனியா நகர் நோக்கி வாடகை வாகனம் (Taxi) ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது, அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனை அவதானித்த வாகனச் சாரதி, உடனடியாக அவரைப் பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்துள்ளார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், வவுனியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"