BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சிலாபத்தில் அதிரடி சோதனை சொகுசு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

சிலாபத்தில் அதிரடி சோதனை சொகுசு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது

சிலாபம், அம்பகதவில பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 150 வெளிநாட்டவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச அளவிலான பாரிய கணினி மற்றும் நிதி மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சீன பிரஜைகள் ஆகும் நிலையில், வியட்நாம், தாய்வான் மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து 99 கணினிகள், 26 மடிக்கணினிகள் மற்றும் 259 கைப்பேசிகள் உள்ளிட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு மாதத்திற்கு முன்பே அந்த விடுதியில் தங்கியிருந்த இவர்கள், விடுதிக்குள்ளேயே இருந்து இணையதளத்தை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் CID அதிகாரிகளால் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"